

சாத்தூர்,
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இம்முறை திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு பதிலாக சாத்தூரில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று தான் கடைசி நாள் என்பதால் நயினார் நாகேந்திரன் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை சாத்தூரில் புகழ்பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு நயினார் நாகேந்திரன் வருகை தந்தார். அங்கு சாமி தரிசம் செய்தார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது;-
இன்றைய தினம் காலை, புகழ்பெற்ற அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவிலில் அம்பாளை மனமுருகி பிரார்த்தனை செய்தேன்.
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் சார்பில் வேட்பாளராக நான் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள இந்த முக்கிய தருணத்தில், நம் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்றும், தற்போதைய திமுக ஆட்சியில் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களிலிருந்து அவர்களை விடுவித்து உண்மையான மக்களாட்சியை நிலைநாட்ட அம்பாள் அருள் துணை நிற்க வேண்டும் என்றும் இறைவனை பணிவுடன் வேண்டிக் கொண்டேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.