வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் நளினி வெளியே வந்தார்

வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் நளினி வெளியே வந்தார். வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலர் சிங்கராயர் வீட்டில் தங்குகிறார்.
வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் நளினி வெளியே வந்தார்
Published on

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதியான நளினி, அவரது மகள் திருமண ஏற்பாட்டுக்காக வியாழக்கிழமை காலை பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் 27 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது கணவர் முருகன் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இத்தம்பதியின் மகளான ஹரித்ரா (26), மருத்துவப் பட்டம் பெற்று லண்டனில் வசித்து வருகிறார். ஹரித்ராவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய தன்னை 6 மாதம் பரோலில் விடுவிக்கக் கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், நளினியை ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க கடந்த 5-ஆம் தேதி உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி திங்கள்கிழமைக்குள் அவர் பரோலில் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக நளினியை பரோலில் விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், அவர் இன்று வியாழக்கிழமை காலை 9.40 மணியளவில் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஊடகங்களிடம் பேசக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் நளினிக்கு பரோல் அளிக்கப்பட்டு உள்ளது. 24 மணிநேர பாதுகாப்புடன் பரோல் காலத்தில் நளினி இருப்பார் என்ற கோர்ட்டு உத்தரவுப்படி பலத்த பாதுகாப்புடன் திராவிட இயக்க தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலர் சிங்கராயர் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com