நல்லகண்ணு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு

கடந்த 24-ந்தேதி இரவு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. 100 வயதாகும் நிலையில் கடந்த 22-ந்தேதி வீட்டில் தவறி விழுந்ததில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து நந்தனத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். நுரையீரல் பிரச்சினை காரணமாக சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால், கடந்த 24-ந்தேதி இரவு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர்கள் குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். தொடர் சிகிச்சையால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து நல்லகண்ணுவின் உடல்நிலையை சீராக்கும் வகையில் தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. சுவாச பிரச்சினையை சரி செய்வதற்கு சிறப்பு டாக்டர்கள் மேற்கொண்ட சிகிச்சையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.






