

சென்னை,
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101) சென்னை யில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலை யில், கடந்த ஆண்டு மே மாதம் 9-ந் தேதி திடீரென நல்ல கண்ணு தனது வீட்டில் தவறி விழுந்தார். இதில் காயம் அடைந்த அவரை குடும்பத்தினர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச் சைக்கு பின்னர் அவர் மாலையில் வீடு திரும்பினார்.
பின்னர், மீண்டும் சில மாதங்களுக்கு பின்னர் நல்லகண்ணுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட் டது. உடனே அவர் சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். ஆஸ்பத்திரியில் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
மேலும், மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்று உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டதால் நல்லகண்ணு வுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பதாக ஆஸ்பத்திரியின் டீன் சாந்தாராமன் கூறினார். இதனையடுத்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள் ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று நல்லகண்ணு உடல்நலம் குறித்து விசா ரித்தனர். பின்னர் சிறிது மாதங்களுக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார்.
அவ்வப்போது அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தொடர்ந்து 20 நாள்களுக்கும் மேலாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவரும் நிலையில், தற்போது அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இதனிடையே முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், ராஜீவ் காந்தி மருத்துவமனைக்குச் சென்று நல்லகண்ணுவை சந்தித்து, அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் நல்லகண்ணுவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "நல்லகண்ணுவின் உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நாட்டுக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர் தற்போது இயற்கையுடன் போராடி வருகிறார்" எனக் குறிப்பிட்டார்.
நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு என்ற செய்தி அவருடைய கட்சி நிர்வாகிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.