தொப்பூர் கணவாயில் பொது கழிப்பிடம் கட்ட வேண்டும் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

தொப்பூர் கணவாயில் பொது கழிப்பிடம் கட்ட வேண்டும் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
Published on

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஷகிலா, கவுரி ஆகியோர் கலந்து கொண்டு கூட்டத்தின் நோக்கம் மற்றும் தீர்மானங்கள் குறித்து பேசினர்.

கூட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளுக்கு கட்டி கொடுக்கப்படும் புதிய கட்டிடங்களை பள்ளி தலைமை ஆசிரியர்களும் பராமரிக்க முன்வர வேண்டும். தொப்பூர் கணவாயில் பொது சுகாதார கழிப்பிடம் கட்ட வேண்டும். குண்டும் குழியுமான சோளியானூர்- மலையூர்காடு வரை செல்லும் தார்சாலையை சீர் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினர். இதில் அனைத்து துறை அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com