நல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

நல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
Published on

ராமநத்தம், 

வேப்பூர் அடுத்த நல்லூர் ஊராட்சியில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் சார்பதிவாளர் பத்திரப்பதிவிற்கு வரும் மக்களை அவமரியாதையாக பேசுவதாகவும், பல்வேறு அலுவல் பணிகள் காரணமாக வரும் அப்பகுதி மக்களிடம் இடைத்தரகர் மூலம் லஞ்சம் கேட்பதாகவும் கூறப்படுகிறது. இதை கண்டித்தும், சார்பதிவாளரை மாற்றக்கோரியும் அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா குமரேசன் தலைமையில் சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் மாவட்ட பதிவாளர் பரமேஸ்வரியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com