நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

நாம் தமிழர் கட்சி சார்பில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசு மற்றும் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பொன் சத்யா தலைமை தாங்கினார். இதில் மக்களவை தொகுதி பொறுப்பாளர் ராஜசேகர் உள்பட நாம் தமிழர் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com