நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

நெல்லை வண்ணார்பேட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்பை பகுதிகளில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங்கை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கவேலு, மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்யா, நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் வக்கீல் மகாராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் நெல்லை தொகுதி செயலாளர் காளிமுத்து, பாளையங்கோட்டை தொகுதி செயலாளர் ஜேக்கப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் வக்கீல் மகாராஜன் கூறுகையில், 'பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும். பல்வீர்சிங் உள்பட தவறு செய்த போலீசார் 15 பேரை உடனடியாக கைது செய்ய வேண்டும். தடயங்களை அழிக்கவே தமிழக அரசு விசாரணை ஆணையங்களை அமைத்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.சி.ஐ.டி விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே சி.பி.ஐ. விசாரணை வேண்டும். அரசே இதனை செய்ய வேண்டும். இல்லையென்றால் சி.பி.ஐ. விசாரணைக்காக உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தை நாடுவோம்' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com