நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 2,600 டன் மக்காச்சோளம் வந்தது

நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 2,600 டன் மக்காச்சோளம் வந்தது
நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 2,600 டன் மக்காச்சோளம் வந்தது
Published on

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு தேவையான தீவன மூலப்பொருட்கள் பெரும்பாலும் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரெயிலில் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். அதன்படி நேற்று உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து 2,600 டன் மக்காச்சோள மூட்டைகள் சரக்கு ரெயிலில் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டது. 42 வேகன்களில் வந்திருந்த மக்காச்சோள மூட்டைகள் அனைத்தும் 120 லாரிகளில் ஏற்றப்பட்டு நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் டவுன் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நல்லதம்பி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com