

நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கோழி முட்டை கொள்முதல் விலை நேற்றை நிலவரப்படி 580 காசுகளாக (ரூ.5.80) இருந்து வந்தது. இதற்கிடையே இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த நிர்வாகிகள் முடிவு செய்தனர். எனவே இன்று முட்டை கொள்முதல் விலை 585 காசுகளாக (ரூ.5.85) அதிகரித்துள்ளது.