

நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகில் உள்ள வட்டமலை குள்ளங்காடு பகுதியைச் சேர்ந்த தறித்தொழிலாளியின் 14 வயது மகளை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குமாரபாளையம் பகுதியை சேர்ந்த 12 பேர் மீது நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சித பிரியா புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 11 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட, குமார், வடிவேல், சுந்தரம், பன்னீர், மூர்த்தி, கோபி, அபி, சங்கர், நாய் சேகர், சரவணன் உள்ளிட்ட 11 பேரும் திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.