மனைவியின் சகோதரிகளை ஆபாசமாக சித்தரித்த கணவர் கைது

திருமணத்திற்குப் பிறகு இளங்கோ, தனது மனைவியின் குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகியுள்ளார்.
மனைவியின் சகோதரிகளை ஆபாசமாக சித்தரித்த கணவர் கைது.
இளங்கோ
Published on: 

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில், தனது மனைவியின் அக்கா மற்றும் தங்கையின் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்ப முயன்ற கணவர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆபாச படங்கள் சித்தரிப்பு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஒரு கல்லூரி மாணவி. இவருக்கும், ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரிந்து வரும் இளங்கோ (வயது 25) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு இளங்கோ, தனது மனைவியின் குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகியுள்ளார்.

இந்நிலையில், தனது மனைவியின் அக்கா மற்றும் தங்கையின் சாதாரண புகைப்படங்களை ரகசியமாக சேகரித்த இளங்கோ, நவீன ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றை ஆபாச படங்களாக மாற்றியுள்ளார். பின்னர் அந்த படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

போலீஸ் நடவடிக்கை

இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், மார்பிங் செய்யப்பட்ட படங்கள் இளங்கோவின் சாதனங்களில் இருந்ததை உறுதி செய்தனர்.

கைது

இதையடுத்து, தலைமறைவாக இருந்த இளங்கோவை இன்று (சனிக்கிழமை) அன்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த லேப்டாப் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com