நாமக்கல் கிட்னி விற்பனை விவகாரம்: மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை

மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் கிட்னி விற்பனை விவகாரம்: மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை
Published on

சென்னை,

கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை செய்திகளில் வரப்பெற்ற முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து விசாரித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் .எஸ்.வினீதை, நியமித்து 18.07.2025 அன்று ஆணை வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் எஸ்.வினீத், மீனாட்சிசுந்தரி, இணை இயக்குநர் (சட்டம்), மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், சென்னை, ராஜ்மோகன், இணை இயக்குநர் நலப்பணிகள் நாமக்கல், கே. மாரிமுத்து, இணை இயக்குநர் நலப்பணிகள் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டம், சீத்தாராமன், காவல் துணை கண்காணிப்பாளர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், சென்னை ஆகியோர் அடங்கிய குழு தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவனை, பெரம்பலூர் மற்றும் சிதார் மருத்துவனை, திருச்சி மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரிவான விசாரணை மேற்கொண்டனர்.

இவ்விசாரணையின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை அறிக்கையினை எஸ்.வினீத், அரசுக்கு அனுப்பியுள்ளார். அந்த முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவனை, பெரம்பலூர் மற்றும் சிதார் மருத்துவனை, திருச்சி ஆகிய மருத்துவமனைகளுக்கு மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டம் 1994 பிரிவு 16 உட்பிரிவு (2) ன்படி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமம் பொதுமக்கள் நலன் கருதி தற்காலிகமாக நிறுத்தி வைக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com