நாமக்கல்: துப்பாக்கி முனையில் பணம், நகை கொள்ளை - 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை

கோவை சரக டி.ஐ.ஜி. சாமிநாதன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
நாமக்கல்: துப்பாக்கி முனையில் பணம், நகை கொள்ளை - 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் அம்மன் கோவில் தோட்டத்தை சேர்ந்த கலைச்செல்வி என்ற மூதாட்டியிடம் மர்ம நபர்கள் துப்பாக்கி மற்றும் கத்தியை காண்பித்து மிரட்டி, அவர் அணிந்திருந்த 5 பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த 15 பவுன் நகை 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை சரக டி.ஐ.ஜி. சாமிநாதன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களல் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com