தேஜ கூட்டணிக்கு நாமக்கல் பெரிய முட்டையாகத் தர வேண்டும்! - மு.க.ஸ்டாலின்

இப்போரில் தமிழ்நாடு வெல்ல திராவிட மாடல் ஆட்சிதான் தொடர வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தேஜ கூட்டணிக்கு நாமக்கல் பெரிய முட்டையாகத் தர வேண்டும்! - மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் என்.டி.ஏ. கூட்டணிக்கு நாமக்கல் பெரிய முட்டையாகத் தர வேண்டும்!

மறுவரையறை செய்து வடமாநிலங்களின் வலிமை அதிகரிக்கப்பட்டால், இனி, தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தலுக்கும், நம் மக்கள் அளிக்கும் வாக்குகளுக்கும் மதிப்பு இல்லாமல் போய்விடும்.

இடஒதுக்கீட்டு உரிமைக்கும், மொழியுரிமைக்கும் போராடி வென்ற நாம், இன்று நம் அரசியல் உரிமைக்காகப் போராடுகிறோம்.

போராட்டம் கூட அல்ல, இது போர்! இப்போரில் தமிழ்நாடு வெல்ல திராவிட மாடல் ஆட்சிதான் தொடர வேண்டும்; தொடரும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com