நாமக்கல்: கோவிலுக்குள் சிசிடிவி கேமரா பொருத்த அர்ச்சகர்கள் எதிர்ப்பு


நாமக்கல்: கோவிலுக்குள் சிசிடிவி கேமரா பொருத்த அர்ச்சகர்கள் எதிர்ப்பு
x

கையில் பதாகைகளை ஏந்தி கோவிலை சுற்றி வந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலின் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொருத்த அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கையில் பதாகைகளை ஏந்தி கோவிலை சுற்றி வந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மரகத லிங்கத்தை பாதுகாக்க ஆகம விதிகளுக்கு முரணாக அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தங்களையும், பக்தர்களையும் புண்படுத்தும் செயல் என்றும், இதனை கேட்டால் அதிகாரிகள் தங்களை மிரட்டுவதாகவும் அர்ச்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

1 More update

Next Story