அனைத்து நடிகர்களும் விரும்பினால் நடிகர் சங்கத்தின் பெயரை ‘தமிழ் நடிகர் சங்கம்’ என்று மாற்றலாம் கமல்ஹாசன் பேட்டி

அனைத்து நடிகர்களும் விரும்பினால் நடிகர் சங்கத்தின் பெயரை ‘தமிழ் நடிகர் சங்கம்’ என மாற்றலாம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
அனைத்து நடிகர்களும் விரும்பினால் நடிகர் சங்கத்தின் பெயரை ‘தமிழ் நடிகர் சங்கம்’ என்று மாற்றலாம் கமல்ஹாசன் பேட்டி
Published on

சென்னை,

நடிகர் சங்க தேர்தலில் ஓட்டு போட்டபின் நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:-

நடிகர்கள் ஒரே குடும்பம். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ் நடிகர் சங்கம் என்று மாற்றும்படி அதிகமானோர் விரும்பினால் மாற்றலாம். தபால் ஓட்டுகள் சரியான நேரத்துக்கு சென்று சேரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த குளறுபடியால் ரஜினிகாந்தால் வாக்களிக்க முடியவில்லை.

ரஜினிகாந்த் உள்பட அனைத்து நடிகர்-நடிகைகளின் வாக்குகளும் முக்கியம். ரஜினிகாந்த் வாக்களிக்காதது வருத்தம். அடுத்த தேர்தலில் தபால் ஓட்டுகளில் இதுபோன்ற சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

நடிகர் விஜயகுமார் கூறியதாவது:- தேர்தலில் எந்த அணி வெற்றி பெற்றாலும் நலிந்த கலைஞர்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி தரவேண்டும். நடிகர் சங்க கட்டிடத்தையும் கட்டி முடிக்க வேண்டும். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றி தமிழ்த்தாய் நடிகர் சங்கம் என்று பெயர்சூட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் நாசர் கூறியதாவது:- நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவதும், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவிகள் செய்வதும் பாண்டவர் அணிதான். எனவே தைரியமாக இந்த தேர்தலை எதிர்கொள்கிறோம். தேர்தல் 6 மாதம் தாமதமாக நடப்பதற்கான காரணத்தை சொல்லி விட்டோம். தபால் ஓட்டுகள் பதிவாவதில் சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளன.

நடிகை லதா கூறியதாவது:- நடிகர் சங்க தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்று இரண்டு மூன்று நாட்களாக தவித்தோம். பல பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த தேர்தல் வெற்றிகரமாக நடப்பது மகிழ்ச்சி. பாண்டவர் அணிக்கு எனது ஆதரவு. சுவாமி சங்கரதாஸ் அணிக்கு எனது வாழ்த்துகள். நடிகர் சங்கத்துக்கான கட்டிடத்தை கட்டி முடிக்க வேண்டும். அதில் எல்லோருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com