மெட்ரோ ரெயில் பணி: நம்ம சென்னை செல்பி மேடை மூடல்

சென்னை மெரினா கடற்கரையில் மெட்ரோ ரெயில் பணிக்காக "நம்ம சென்னை" செல்பி மேடை இரும்பு தடுப்புவேலிகள் அமைத்து மூடப்பட்டது.
மெட்ரோ ரெயில் பணி: நம்ம சென்னை செல்பி மேடை மூடல்
Published on

சென்னையில் 2-வது கட்டமாக மெட்ரோ ரெயில் பணிகள் நடை பெறுகிறது. இதில் 4-வது வழித்தடம் மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26 கி.மீ. தூரத்துக்கு சுரங்கம், மற்றும் உயர்மட்ட வழித்தடப்பாதைகள் மூலம் அமைக்கப்பட உள்ளது.

இதற்காக கலங்கரை விளக்கம் முதல் "நம்ம சென்னை" செல்பி மேடை வரை இரும்பு தடுப்பு வேலிகள்,பலகைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகரத்தின் முக்கிய அடையாளமாக திகழும் வகையில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள "நம்ம சென்னை" செல்பி மேடை முழுவதுமாக மெட்ரோ ரெயில் பணிக்காக மூடப்பட்டது. பொதுமக்கள் யாரும் அங்கு செல்லாதவாறு இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதனால் "நம்ம சென்னை" செல்பி மேடையில் செல்பி எடுக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் முடியும் வரை 6 வருடத்திற்கு "நம்ம சென்னை" செல்பி மேடை திறக்கப்படாது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com