வாழைத்தார் விலை உயர்வு

வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது.
வாழைத்தார் விலை உயர்வு
Published on

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன் வாழை உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிர் செய்துள்ளனர். இங்கு விளையும் வாழைத்தார்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.300-க்கும், ரஸ்தாலி ரூ.300-க்கும், பச்சைநாடன்ரூ.300-க்கும், கற்பூரவள்ளி ரூ.350-க்கும். மொந்தன் ரூ.500-க்கும் விற்பனையானது. நேற்று பூவன் வாழைத்தார் ரூ.350-க்கும், ரஸ்தாலி ரூ.400-க்கும், பச்சைநாடன் ரூ.350-க்கும், கற்பூரவள்ளி ரூ.400-க்கும், மொந்தன் ரூ.700-க்கும் விற்பனையானது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com