கைத்தறி கண்காட்சி

கைத்தறி கண்காட்சி
கைத்தறி கண்காட்சி
Published on

திருப்பூர்

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை கலெக்டர் வினீத் நேற்று காலை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்பட்ட மென்பட்டு சேலைகள், கோரா காட்டன் சேலைகள், கோரா சேலைகள், காட்டன் சேலைகள், பெட்ஷீட்கள், துண்டு வகைகள், காலணிகள், பட்டு அங்கவஸ்திரங்கள் போன்ற ரூ.25 லட்சம் மதிப்பிலான ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் 30-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் கலந்துகொண்டன. இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கண்காட்சி நடக்கிறது. 20 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்காட்சியில் 7 கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் மதிப்பில் கடன் உதவிகள் வழங்கப்பட்டன. திருப்பூர் சரகத்தின் கீழ் செயல்படும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள வயதான 60 வயதுக்கு மேற்பட்ட நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மாநில அளவில் விருது பெற்ற சிறந்த வடிவமைப்பாளர் கோவில்வழி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தைசேர்ந்த வடிவேலுக்கும், சிறந்த நெசவாளர் விருது பெற்ற சுமதிக்கும், திறன்மிகு நெசவாளர் விருது பெற்ற தந்தை பெரியார் கோவில்வழி கைத்தறி கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த தமிழ்செல்வி ஆகியோர் பரிசு மற்றும் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். கைத்தறி உதவி இயக்குனர் வெற்றிவேல் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com