நாங்குநேரி இரட்டை கொலை: ஏற்க முடியாத குற்றம் - அதிமுக கண்டனம்

சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல் விளம்பர ஆட்சி நடத்தும் திமுக அலட்சிய போக்கின் விளைவு என அதிமுக கூறியுள்ளது.
நாங்குநேரி  இரட்டை கொலை: ஏற்க முடியாத குற்றம் - அதிமுக கண்டனம்
Published on

சென்னை,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நடந்த இரட்டை கொலை சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக நெல்லை எஸ்.பி. பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார். இரட்டை கொலையை கண்டித்து பெரும்பத்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாங்குநேரி - களக்காடு சாலையில் மக்கள் மறியலில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்தநிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிடப்பட்ட அறிக்கையில்,

நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்தில் அரங்கேறிய கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம்.சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல் விளம்பர ஆட்சி நடத்தும் திமுக அலட்சிய போக்கின் விளைவு இது.

தென் மாவட்டங்களில் நடக்கௌம் சமூக ரீதியான மோதல்களை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்தது.

தென் பகுதிகளை பதற்ற நிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என்பது திமுக அரசின் எண்ணமா?

மேடைகளில் சமத்துவம் என்று பேசும் திமுக, மோதல்களை வேடிக்கை பார்ப்பது வெட்க்கக்கேடு.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com