நாங்குநேரி சம்பவம் - மேலும் ஒரு சிறுவன் கைது

நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை வீடு புகுந்து வெட்டிய சம்பவத்தில் மேலும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாங்குநேரி சம்பவம் - மேலும் ஒரு சிறுவன் கைது
Published on

நாங்குநேரி,

நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக 17 வயதுடைய பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக மேலும் ஒரு சிறுவனை போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர்.  

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com