த.வெ.க. பரப்புரைச் செயலாளராக நாஞ்சில் சம்பத் நியமனம்

தமிழக வெற்றிக் கழகத்தில் நேற்று இணைந்த நாஞ்சில் சம்பத்திற்கு பொறுப்பு வழங்கி விஜய் உத்தரவிட்டுள்ளார்
த.வெ.க. பரப்புரைச் செயலாளராக நாஞ்சில் சம்பத் நியமனம்
Published on

சென்னை,

தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவர், சிறந்த பேச்சாளர். அனைவரிடத்திலும் இனிமையாகப் பழகக் கூடியவர், அண்ணன் திரு. நாஞ்சில் சம்பத் அவர்கள், தம்மைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டுள்ளார். மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கும் அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நாஞ்சில் சம்பத் அவர்கள். கழகத்தின் பரப்புரைச் செயலாளர் (Campaign Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்

என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.இவர், பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்களுடன் இணைந்து தன்னுடையப் பணிகளை மேற்கொள்வார்.கழக நிர்வாகிகளும் தோழர்களும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com