

வருங்கால வைப்பு நிதி தாம்பரம் மண்டல அலுவலக தொழிற்சங்கத்தின் தலைவராக தமிழக பா.ஜ.க. துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி நியமிக்கப்பட்டார். நேற்று அவர் தாம்பரம் மண்டல அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தாம்பரம் மேற்கு நகர தலைவர் ராஜா, கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் விஜயலட்சுமி, ஐ.டி.பிரிவு மாநில செயலாளர் விவின் பாஸ்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹரிபாபு, மாவட்ட ஓ.பி.சி. தலைவர் பாலாஜி தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.