சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை - சிறப்பு அதிகாரி சுகுமார் பேட்டி...!

சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என சிறப்பு அதிகாரி சுகுமார் தெரிவித்து உள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை - சிறப்பு அதிகாரி சுகுமார் பேட்டி...!
Published on

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சிறப்பு அதிகாரி சுகுமார் இன்று மாலை நிருபர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

நடராஜர் கோவிலில் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு இரண்டு நாட்கள் ஆய்வினை முடித்து இன்று மாலை 4.15 மணிக்கு மீண்டும் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தனர். இந்த ஆய்வின் போது பொது தீட்சிதர்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

நாங்கள் கேட்ட ஆவணங்களை எங்களிடம் காண்பிக்கவில்லை. நேற்று இருந்த தீட்சிதர்களின் செகரட்டரி இன்று இல்லை. அலுவலகத்தின் சாவியும் இல்லை என்று சொல்லிவிட்டனர். இதனால் எங்களால் முழுமையாக ஆய்வு செய்ய இயலவில்லை. இந்த அறிக்கையை நாங்கள் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அவர்களுக்கு சமர்ப்பிக்க உள்ளோம். அவரின் உத்தரவைப் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com