தேசிய வேளாண் சந்தை திட்டம் :213 பணியாளர்களுக்கு வேலை பறிபோகிறதா?

வரும் 30-ந் தேதிக்கு பிறகு அதற்கு பணி நீட்டிப்புக்கு வாய்ப்பில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி நீட்டிப்புக்கு வாய்ப்பில்லை
தேசிய வேளாண் சந்தை திட்டம்
Published on

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் வேளாண் விற்பனையை எளிமையாக்க, தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், 2017-ம் ஆண்டு முதல் 213 வேளாண் சந்தை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

விவசாயிகளுக்கு தினசரி சந்தை விலை நிலவரங்கள் மற்றும் விளைபொருட்களின் விலைத் தக வல்களை அவர்கள் வழங்குகிறார்கள். இந்தநிலையில், இந்த மாதம் 30-ந்தேதியுடன் அவர்க ளுக்கான பணிக்காலம் நிறைவடைவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றில், 'இ-நாம் திட்டத்தில் மண்டி (சந்தை) ஆய்வாளர்களின் பணி என்பது ஆரம்பக்கட்ட உதவிக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. வரும் 30-ந் தேதிக்கு பிறகு அதற்கு பணி நீட்டிப்புக்கு வாய்ப்பில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, 2017-ம் ஆண்டு முதல் தொடர்ந்து பணியாற்றி வரும் 213 மண்டி ஆய்வு பணியாளர்கள் வேலை கேள்விக்குறியாக மாறியுள்ளது. தங்களுக்கான பணி நீட்டிப்பை உறுதி செய்ய முதல்-அமைச்சருக்கு அவர்கள் கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com