

சென்னை,
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தேசிய அளவில் சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியன தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசின், சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கும் (மாற்றுத்திறனாளிகள் நலன்) அமைச்சகத்தால், கீழ்க்கண்ட தேசிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.
விருது வகை மற்றும் தகுதி
1. சிறந்த மாற்றுத்திறனாளி (கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, கலை மற்றும் கலாச்சாரம், விளையாட்டு, ஆக்கப்பூர்வமான பணி, மாற்றுத்திறனாளிகள் மேம்பாடு, சமூக சேவை போன்ற ஏதேனும் ஒரு துறையைச் சார்ந்தவர் - ஒரு முன்மாதிரியான நபர்) - RPwD சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு குறைபாட்டைக் கொண்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இது பொருந்தும்.
விருதுகளின் எண்ணிக்கை
6 (ஆண்களுக்கு 3 மற்றும் பெண்களுக்கு 3)
a. உடல் இயக்கக் குறைபாடு (Locomotor Disability) – (உடல் இயக்கம் சார்ந்த குறைபாடு, தசை சார்ந்த குறைபாடு, குள்ளத்தன்மை, அமிலத் தாக்குதலுக்கு ஆளானவர்கள், தொழுநோயிலிருந்து குணமடைந்தவர்கள், பெருமூளை வாதம்/Cerebral Palsy)
b. பார்வைக் குறைபாடு – (முழுமையான பார்வை இழப்பு, குறைந்த பார்வை)
c. செவித்திறன் குறைபாடு – (காது கேளாமை, செவித்திறன் குறைபாடு, பேச்சு மற்றும் மொழித் திறன் குறைபாடு)
d. அறிவுசார் குறைபாடு – (மனவளர்ச்சி குறைபாடு, மனநலம் சார்ந்த நடத்தை குறைபாடு, குறிப்பிட்ட கற்றல் குறைபாடு, ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு)
e. மேலே (a) முதல் (d) வரை குறிப்பிடப்பட்டவை தவிர்த்த ஏனைய குறிப்பிட்ட குறைபாடுகள். (வளர்ச்சிசார் குறைபாடு, இரத்தக் கோளாறுகளால் ஏற்படும் குறைபாடு, ஹீமோபிலியா, தலசீமியா, அரிவாள் செல் நோய்/Sickle Cell Disease, நாள்பட்ட நரம்பியல் பாதிப்புகள், மல்டிபிள் ஸ்களீரோசிஸ், பார்கின்சன் நோய், பலவிதமான குறைபாடுகள்/Multiple Disability)
குறிப்பு: மேலே உள்ள துணை வகைகளில் ஏதேனும் ஒன்றிலோ அல்லது அதற்கு மேற்பட்டவற்றிலோ தகுதியான நபர்கள் கிடைக்கப்பெறாத பட்சத்தில், அந்த விருதுகள் பிற துணை வகைகளைச் சேர்ந்த கூடுதல் நபர்களுக்கு வழங்கப்படலாம்.
(வேலைவாய்ப்பு / சுயதொழில், சுகாதாரம் / விளையாட்டு, கலை, கலாச்சாரம், ஓவியம், இசை அல்லது வேறு ஏதேனும் ஆக்கப்பூர்வமான பணி, மாற்றுத்திறனாளிகளின் மேம்பாடு ஆகிய துறைகளில்) 10 விருதுகள் (A முதல் E வரையிலான ஒவ்வொரு பிரிவிலும் ஆண் மற்றும் பெண்ணுக்கு தலா 1 வீதம்)
3. சிறந்த மாற்றுத்திறனாளி சிறுவன் / சிறுமி (RPwD சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்ட மாற்றுத்திறன் வகைகளைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள்) (கலை மற்றும் கலாச்சாரம், ஓவியம், இசை அல்லது வேறு ஏதேனும் ஆக்கப்பூர்வமான பணி போன்ற துறைகளில்) 2 விருதுகள் (ஆண் மற்றும் பெண்ணுக்கு தலா 1 வீதம்)
4. மாற்றுத்திறனாளிகளின் முழுமையான மறுவாழ்வுக்காகப் பணியாற்றும் சிறந்த தனிநபர் (அரசு சாரா அமைப்பு - NGO) 1 விருது
5. மாற்றுத்திறனாளிகள் துறையில் பணியாற்றும் சிறந்த மறுவாழ்வு நிபுணர் - 1 விருது
6. மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத் துறையில் சிறந்த ஆராய்ச்சி / புதுமை / தயாரிப்பு மேம்பாடு 3 விருதுகள்
வரிசை எண் | விருது வகை | விருதுகளின் எண்ணிக்கை
1. மாற்றுத்திறனாளிகளுக்காகப் பணியாற்றும் சிறந்த நிறுவனம் (தனியார் அமைப்பு, அரசு சாரா அமைப்பு - NGO) | முழுமையான மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்கு - 1 விருது
உள்ளடக்கிய கல்விக்கு (Inclusive Education) 1 விருது (உள்ளடக்கிய கல்வியை வழங்கும் அல்லது ஊக்குவிக்கும் நிறுவனங்கள்)
2. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சிறந்த பணியமர்த்துபவர் (அரசு அமைப்பு / பொதுத்துறை நிறுவனம் / தன்னாட்சி அமைப்புகள் / தனியார் துறை) - 1 விருது
3. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த வேலைவாய்ப்பு முகமை (அரசு / மாநில அரசு / உள்ளாட்சி அமைப்புகள் தவிர்த்து) - 1 விருது
4. 'அணுகக்கூடிய இந்தியா' (Accessible India) பிரச்சாரத்தை செயல்படுத்துவதில் / தடைகளற்ற சூழலை உருவாக்குவதில் சிறந்த மாநிலம் / யூனியன் பிரதேசம் / மாவட்டம் - 1 விருது
5. சிறந்த அணுகக்கூடிய போக்குவரத்து நிறுவனம் / தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் (அரசு / தனியார் அமைப்பு)- 1 விருது
6. மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் (RPwD Act) / UDID மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்கான பிற திட்டங்களை செயல்படுத்துவதில் சிறந்த மாநிலம் / யூனியன் பிரதேசம் / மாவட்டம் | 2 விருதுகள் (மாநிலம் / யூனியன் பிரதேசத்திற்கு 1 விருது மற்றும் மாவட்டத்திற்கு 1 விருது)
7. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த மாநில ஆணையர் (RPwD சட்டம், 2016-ஐ செயல்படுத்துவதில் தங்கள் மாநிலத்தின் செயல்பாட்டிற்காக) - 1 விருது
8. மறுவாழ்வு நிபுணர்களுக்குப் பயிற்சி அளிக்கும் சிறந்த அமைப்பு - 1 விருது
9. சிறந்த பொதுத்துறை நிறுவனம் / தனியார் துறை நிறுவனம் (CSR மூலம் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்குப் பங்களிப்பு செய்தல்) - 1 விருது
மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் / நிறுவனங்கள் இதற்கான விவரங்களை www.depwd.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், உரிய விண்ணப்பங்களை www.awards.gov.in என்ற இணையதளத்தில் 31.07.2026க்குள் நேரடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.