திருச்சியில் தேசிய குத்துச்சண்டை போட்டி

திருச்சியில் நடந்த தேசிய குத்துச்சண்டை போட்டியில் 12 மாநில வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.
திருச்சியில் தேசிய குத்துச்சண்டை போட்டி
Published on

தேசிய குத்துச்சண்டை போட்டி

திருச்சியில் அகில இந்திய தொழில்முறை குத்துச்சண்டை போட்டி தேசிய கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி, பஞ்சாப், அரியானா, குஜராத், உத்தரகாண்ட், கேரளா, கர்நாடகா, மராட்டியா, ஆந்திரா உள்பட 12 மாநிலங்களில் இருந்து 38 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

குத்துச்சண்டை அரங்கம்

குத்துச்சண்டை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தே விளையாடப்படும் விளையாட்டு. முன்பெல்லாம் சுற்றுமுறைகள், நேர விதிமுறையெல்லாம் இருக்காது. எதிர்முனையில் உள்ள போட்டியாளர் மயக்கம் அடைந்து கீழே விழும் அளவுக்கு நீண்டநேரம் போட்டி நடக்கும். நடுவர்களே அசந்து போய்விடும் அளவுக்கு கூட போட்டிகள் நடந்துள்ளன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். அந்தவகையில் தான் வடசென்னையில் ரூ.10 கோடியில் குத்துச்சண்டை அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் தேசிய கல்லூரி முதல்வர் குமார், துணை முதல்வர் பிரசன்னபாலாஜி, அகில இந்திய குத்துச்சண்டை தலைவர் பிரிகேடியர் முரளிதரன் ராஜா மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com