இந்திய மாதர் தேசிய சம்மேளன கூட்டம்

பரமக்குடியில் இந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது.
இந்திய மாதர் தேசிய சம்மேளன கூட்டம்
Published on

பரமக்குடி,

பரமக்குடியில் இந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் பெருமாள் தொடங்கி வைத்தார். மாதர் சம்மேளன மாநில துணைத்தலைவர் ராஜலட்சுமி சிறப்புரையாற்றினார்.

இதில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமல்படுத்த வேண்டும். ரயில் பயணத்தில் 55 வயது நிரம்பிய பெண்களுக்கு பயண கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் சுகந்தி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் ராஜன், ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் செந்தில்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com