மருத்துவமனைகளில் தேசிய டாக்டர்கள் தினம் கொண்டாட்டம்

மருத்துவமனைகளில் தேசிய டாக்டர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
மருத்துவமனைகளில் தேசிய டாக்டர்கள் தினம் கொண்டாட்டம்
Published on

மேற்கு வங்க மாநிலத்தின் 2-வது முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் டாக்டர் பிதன் சந்திர ராய் (பி.சி.ராய்). இவர் சுதந்திர போராட்ட வீரராக மட்டுமல்லாமல், சிறந்த டாக்டராகவும் பணியாற்றினார். பி.சி.ராய் பிறந்தது 1882-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி, மறைந்தது 1962-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி ஆகும். மருத்துவம், அரசியல் நிர்வாகம், கல்வி என தான் பங்கெடுத்த துறைகளில் முன்மாதிரியாக டாக்டர் பி.சி.ராய் திகழ்ந்தார். அவரது சேவைகளை போற்றும் வகையில், அவரது பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் தேசிய டாக்டர்கள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தேசிய டாக்டர்கள் தினத்தையொட்டிமாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டாக்டர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது டாக்டர்கள் கேக் வெட்டியும், ஒருவருக்கொருவர், டாக்டர்கள் தின வாழ்த்துக்களை கூறி, இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். மேலும் டாக்டர்களுக்கு மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளிகளும் வாழ்த்துக்களை கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com