ரூ.72½ லட்சத்தில் நாட்டின நாய்கள் ஆராய்ச்சி மையம் ; கலெக்டர் அடிக்கல் நாட்டினார்

பாவூர்சத்திரத்தில் ரூ.72½ லட்சத்தில் கட்டப்பட உள்ள நாட்டின நாய்கள் ஆராய்ச்சி மையத்துக்கு கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
ரூ.72½ லட்சத்தில் நாட்டின நாய்கள் ஆராய்ச்சி மையம் ; கலெக்டர் அடிக்கல் நாட்டினார்
Published on

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ரூ.72.55 லட்சம் மதிப்பீட்டில், நாட்டின நாய்கள் இன பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மைய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன், பழனி நாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக உற்பத்தி கல்வி மைய இயக்குனர் டாக்டர் மீனாட்சிசுந்தரம், நாட்டின நாய்கள் ஆராய்ச்சி மைய தலைவர் முரளி முருகன், கீழப்பாவூர் யூனியன் தலைவர் காவேரி சீனித்துரை, துணை தலைவர் முத்துக்குமார், ஒன்றிய தி.மு.க. செயலாளர் சீனித்துரை, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமஉதயசூரியன், மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com