தேசிய திரைப்பட விருதுகள்: தமிழ் திரையுலக கலைஞர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து

தமிழ்த் திரையுலகின் பெருமையை உயர்த்திய அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலக கலைஞர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து
Published on

சென்னை,

தேசிய விருதுகள் வென்ற தமிழ் சினிமா கலைஞர்களுக்கு வீ தி லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

அறிவிக்கப்பட்டுள்ள 72 ஆவது தேசிய விருதுகளில், தமிழகத் திரைத்துறையில் இருந்து, சிறந்த தமிழ்த் திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராயன் திரைப்படக் குழுவினர் மற்றும் சமூக மற்றும் தேசிய நலன் பிரிவில் சிறப்பு விருது வென்றுள்ள கேப்டன் மில்லர் திரைப்படக் குழுவினருக்கும், சிறப்பு விருது வென்றுள்ள தனுஷ் அவர்களுக்கும், அமரன் திரைப்படத்துக்காக தமிழ் மொழியில் சிறந்த இயக்குநர் விருது வென்றுள்ள ராஜ்குமார் பெரியசாமி, சிறந்த பின்னணி இசையமைப்பாளர் விருது வென்றுள்ள ஜி.வி.பிரகாஷ் குமார், சிறந்த படத்தொகுப்பு விருது வென்றுள்ள கலைவாணன் ஆகியோருக்கும், மகாராஜா திரைப்படத்துக்காக சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான விருது வென்றுள்ள அனல் அரசு, சிறந்த துணை நடிகை விருது வென்றுள்ள செல்வி. சச்சனா நமிதாஸ் ஆகியோருக்கும், மெய்யழகன் திரைப்படத்துக்காக சிறந்த ஒலிக்கலவை விருது வென்றுள்ள சுரேன் ஜி உள்ளிட்ட அனைவருக்கும், மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், “BLUE” (non feature) படத்துக்காக சிறந்த ஒலி வடிவமைப்பு தேசிய விருது பெற்ற டி.எஸ். ஹரிஹரசுதன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்த் திரையுலகின் பெருமையை உயர்த்திய உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com