தேசிய பெண் குழந்தைகள் தினம்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேசிய பெண் குழந்தைகள் தினம்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து
Published on

சென்னை,

மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா என்றார் கவிமணி. ஆண்டுதோறும் அடுக்கடுக்காக பல தினங்கள் கொண்டாடப்பட்டு வந்தாலும், இதில் கவனிக்கத் தகுந்த தினமாக ஆண்டு தோறும் ஜனவரி 24-ந் தேதி தேசிய பெண்குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய பெண்குழந்தைகள் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாப்படுகிறது. இதையொட்டி தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பெண் குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறுகையில்,

* அனைவருக்கும் வணக்கம். இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்.

* பெண் குழந்தைகளை வெறுக்க வேண்டாம்.

* பெண் குழந்தைகளை விரும்ப கற்றுக்கொள்வோம்.

* பெண் குழந்தைகளை நமக்கு பிடித்து படிக்க வைப்போம்.

* பெண் குழந்தைகளின் மனநலம் பாதுகாத்து மனிதநேயம் காப்போம்.

* பெண் குழந்தைகளின் உடல்நலம் காத்து உலக நலம் காப்போம்.

* பெண் குழந்தைகளை ஆராதிக்கக் கற்றுக்கொள்வோம்.

* பெண் குழந்தைகளின் வளச்சியில் தளர்ச்சியில்லாமல் உதவுவோம்.

இந்த தேசிய பெண் குழந்தை தினத்தில் மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம், பெண்களை கொண்டாடுவோம், பெண் குழந்தைகளை கொண்டாடுவோம் என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com