தேசிய லோக் அதாலத்: தமிழகத்தில் ஒரே நாளில் 79,599 வழக்குகளுக்கு தீர்வு

தமிழகம் முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்தில் 79,599 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
தேசிய லோக் அதாலத்: தமிழகத்தில் ஒரே நாளில் 79,599 வழக்குகளுக்கு தீர்வு
Published on

சென்னை,

தமிழகம் முழுவதும் தேசிய லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதில் சென்னை ஐகோர்ட்டில் 4 அமர்வுகளும், மதுரை ஐகோர்ட்டில் 4 அமர்வுகளும், மாவட்ட மற்றும் தாலுகா அளவுகளில் என மாநிலம் முழுவதும் மொத்தம் 419 அமர்வுகளும் வழக்குகளை தீர்வு காண்பதற்காக எடுத்துக் கொண்டன.

இதில் 334 கோடியே 91 லட்சத்து 11 ஆயிரத்து 545 ரூபாய் மதிப்பிலான 79 ஆயிரத்து 599 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 63 ஆயிரத்து 348 வழக்குகளும், நீதிமன்ற விசாரணைக்கு வராத 12 ஆயிரத்து 251 வழக்குகளும் இதில் அடங்கும்.

மேலும் 2,004 செக் மோசடி வழக்குகளில் இரு தரப்பினருக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு 49 கோடியே 97 லட்சத்து 23 ஆயிரத்து 381 ரூபாய் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், 3 ஆயிரத்து 157 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் 144 கோடியே 85 லட்சத்து 25 ஆயிரத்து 246 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 7 ஆயிரத்து 301 சிவில் வழக்குகளில் 33 கோடியே 60 லட்சத்து 32 ஆயிரத்து 130 ரூபாய் வழங்கவும், 106 குடும்ப நல வழக்குகள் இந்த லோக் அதாலத்தில் தீர்வு காணப்பட்டுள்ளதாவும், தொழிலாளர் பிரச்சினை தொடர்பான 20 வழக்குகளில் 71 லட்சத்து 50 ஆயிரத்து 900 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com