தேசிய கட்சிகள் விருப்பு வெறுப்புகளை காண்பிப்பதால், மாநில கட்சிகள் வளர்ந்து வருகின்றன-தம்பிதுரை எம்.பி

ரூ 15,000 கோடி நிவாரணம் தர வேண்டுமென்று மத்திய அரசை, வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் வலியுறுத்துவோம் என தம்பிதுரை எம்.பி கூறினார்.
தேசிய கட்சிகள் விருப்பு வெறுப்புகளை காண்பிப்பதால், மாநில கட்சிகள் வளர்ந்து வருகின்றன-தம்பிதுரை எம்.பி
Published on

கரூர்

கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று மக்களிடம் நேரில் குறை கேட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கஜா புயலுக்கு மத்திய அரசு ஒதுக்கிய இடைக்கால நிவாரணம் போதாது. ஆகவே முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் முதலில் கேட்ட ரூ.5 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்க மீண்டும் வற்புறுத்துவார்கள்.

விரைவில் பாராளுமன்றம் கூட இருக்கிறது. அங்கும் கஜா புயல் பாதிப்பு குறித்து குரல் கொடுப்போம். ரூ 15,000 கோடி நிவாரணம் தர வேண்டுமென்று மத்திய அரசை, வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் வலியுறுத்துவோம் .கர்நாடகத்தில் காங்கிரசும், பா.ஜ.க.வும் போட்டி போட்டுக் கொண்டு அரசியல் செய்கிறார்கள். பாராளுமன்ற தேர்தல் வருவதால் மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லாததால் அரசியல் நோக்கத்துடன் பார்க்கிறார்கள். தமிழகத்தில் தமிழ் உணர்வு, திராவிட உணர்வு மேலோங்கியுள்ளது. தேசிய கட்சிகளுக்கு இங்கு இடம் இல்லாத நிலை இருக்கிறது. எனவேதான் புறக்கணிக்கிறார்கள். தேசிய கட்சிகள் மாநில கட்சிகளாகி வருகிறது. தேசிய கட்சிகள் அரசியல் விருப்பு வெறுப்புகளை காண்பிப்பதால் மாநில உணர்வுள்ள கட்சிகள் வளர்ந்து வருகின்றன.

ஒவ்வொரு மாநில மொழியையும், கலாசாரத்தையும் மதித்து மத்திய அரசு நடக்க வேண்டும். அவர்களுக்கு செல்வாக்கு உள்ள மாநிலங்களில் உதவி செய்கிறார்கள். அதிகம் நிதி தருகிறார்கள். இது வருந்தத்தக்கது. இந்தியா ஒற்றுமையாகதான் இருக்கிறது. அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது.என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com