தேசிய ஊரக வேலை திட்ட வேலை நாட்களை 200 நாட்களாக மத்திய அரசு உயர்த்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

தேசிய ஊரக வேலை திட்ட வேலை நாட்களை 200 நாட்களாக மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
தேசிய ஊரக வேலை திட்ட வேலை நாட்களை 200 நாட்களாக மத்திய அரசு உயர்த்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வருவாய் இல்லாத மக்களுக்கு ஒற்றை வாழ்வாதாரமாக உருவெடுத்திருப்பது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தான். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பணியாற்றி, வேலை இழந்த மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிக்க இதுவே காரணமாகும்.

தேசிய ஊரக வேலை திட்டத்திற்கு நிதிநிலை அறிக்கையில், ரூ.61 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் கூடுதலாக ரூ.40,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அத்துடன் கூடுதலாக இன்னொரு ரூ.40,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டால், இத்திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த முடியும். அதன் மூலம் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு இத்திட்டத்தின் கீழ் வேலை வழங்க முடியும். எனவே, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 200 நாட்களாக மத்திய அரசு உயர்த்த வேண்டும். இக்கோரிக்கையை தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பா.ம.க. வன்னியர் சங்க தலைவர் குரு இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com