யூனியன் அலுவலகத்தை தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் முற்றுகை

மானூர் யூனியன் அலுவலகத்தை தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.
யூனியன் அலுவலகத்தை தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் முற்றுகை
Published on

மானூர்:

மானூர் அருகே உள்ள பல்லிக்கோட்டை பஞ்சாயத்து பள்ளமடை பகுதியைச் சேர்ந்த தேசிய ஊரக 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் நேற்று மாலை மானூர் யூனியன் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள், பள்ளமடை பகுதி 100 நாள் பணியாளர்களை இருவேறு குழுக்களாக பிரித்து பணிகள் நடப்பதாகவும், நாளொன்றுக்கு 220 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 3 மாத காலமாக சம்பளம் தரப்படவில்லை எனவும் மானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனாலும் அவர்கள் இதனை ஏற்க மறுத்து கலெக்டரை சந்தித்து பிரச்சினையை தீர்த்துக் கொள்வதாக கூறி கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com