தேசிய அறிவியல் தினம் - செல்வப்பெருந்தகை வாழ்த்து!

முன்னேற்றமான சமுதாயத்தின் அடித்தளம் என்பதை இந்த நாள் நினைவூட்டுகிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தேசிய அறிவியல் தினம் - செல்வப்பெருந்தகை வாழ்த்து!
Published on

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

அறிவியல் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் புதுமைகளின் மூலம் இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைத்து வரும் அனைத்து விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

சர்.சி.வி.ராமன் 1928 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று கண்டுபிடித்த 'ராமன் விளைவு' என்ற மிக முக்கிய கண்டுபிடிப்பிற்காக நினைவுகூரப்படுகிறது. அறிவியல் சிந்தனையும், எதிலும் உண்மையை காணும் மனப்பான்மையும் தான் முன்னேற்றமான சமுதாயத்தின் அடித்தளம் என்பதை இந்த நாள் நினைவூட்டுகிறது.

ஆதாரப்பூர்வமான சிந்தனை, பகுத்தறிவு மற்றும் ஆராய்ச்சி மனப்பான்மை வளர்ந்து, அறிவியல் மனப்பாங்கு சமூகத்தின் அனைத்து துறைகளிலும் வேரூன்ற வேண்டும் என்பதே இந்நாளின் நோக்கமாகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com