

கடையநல்லூர்:
கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் முரளிதரன் தலைமை தாங்கினார். பால் மகேஷ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சீனியர் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற சேவியர் ஜோதி சற்குணம் மற்றும் இந்திய ஆக்கி அணி வீரர் மாரீஸ்வரன் சக்திவேல் கலந்து கொண்டு பேசினர். இதில் பேராசிரியர்கள் மீனாட்சி, சண்முகப்பிரியா, மரகத கோமதி, துரைலிங்கம், முத்து பிரகாஷ், மாரிசெல்வம், முத்துராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பேராசிரியர் சாம்சன் லாரன்ஸ் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் குரு சித்திர சண்முக பாரதி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆறுமுகம் செய்து இருந்தனர்.