

பென்னாகரம்:-
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவர்கள் ஒகேனக்கல் பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். புனித் சாகர் திட்டத்தின் கீழ் நீர் நிலைகளை தூய்மையாக வைப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 120 தேசிய மாணவர் படை மாணவர்கள் ஒகேனக்கல் மெயின் அருவி, தொங்கு பாலம் மற்றும் காவிரி ஆற்றின் கரையோரத்தில் பிளாஸ்டிக் பொருள்கள், துணிகள் ஆகியவற்றை அகற்றி தூய்மை பணியை மேற்கொண்டனர். தொடர்ந்து தமிழ்நாடு ஓட்டல் வளாகத்தில் இருந்து, மெயின் அருவி செல்லும் நடைபாதை வரை ஊர்வலமாக சென்று பொதுமக்கள் சுற்றுலா பயணிகளிடம் நீர்நிலைகளை பாதுகாப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் கதிரேசன், ஒகேனக்கல் தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் உதயசங்கர் மற்றும் தேசிய மாணவர் படை ஆசிரியர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.