தேசிய காசநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

மோரணம் கிராமத்தில் தேசிய காசநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தேசிய காசநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
Published on

செய்யாறு

வெம்பாக்கம் தாலுகா நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மோரணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய காசநோய் தினம் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

டாக்டர் சந்தியா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் முருகவேல், காசநோய் பிரிவு அலுவலர் ராம்ஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் சம்பத் வரவேற்றார்.

இதில் டாக்டர் சந்தியா தேசிய காசநோய் தினம் குறித்தும், காசநோய் வருவதற்கான காரணம், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து பேசினார்.

அப்போது ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையில் காச நோய் பரிசோதனைகளை இலவசமாக செய்து கொள்ளலாம் என்றும், 2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com