நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழா

திமிரி, பென்னகர் அரசு பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழா நடைபெற்றது.
நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழா
Published on

திமிரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த திட்டத்தில் மாணவர்கள் திமிரி சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மருத்துவமனை, பொது இடங்கள், கோவில்கள் மற்றும் அரசு பள்ளிகலில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். முகாம் நிறைவு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு திமிரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். மழையூர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பரணி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சிவசங்கரன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசாக தமிழ் அகராதி வழங்கப்பட்டது. பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கலவை அடுத்த பென்னகர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழாவுக்கு தலைமை ஆசிரியர் (பொறுப்பு) விஜயகுமார் தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் பிரேம் குமார், உதவி திட்ட அலுவலர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் பாரதிதாசன் வரவேற்றார். தி.மு.க. மாவட்ட குழு உறுப்பினர் சிவக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் உபட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி மேலாண்மை குழு கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com