சேக்கனூரில் நாட்டு நலப்பணித்திட்ட நிறைவு விழா

சேக்கனூரில் நாட்டு நலப்பணித்திட்ட நிறைவு விழா நடந்தது.
சேக்கனூரில் நாட்டு நலப்பணித்திட்ட நிறைவு விழா
Published on

அடுக்கம்பாறை

சேக்கனூரில் நாட்டு நலப்பணித்திட்ட நிறைவு விழா நடந்தது.

சேக்கனூர் ஊராட்சியில் வேலூர் தனியார் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள், சேக்கனூர் ஊராட்சியில் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டு கிராமப்புற பகுதிகளில் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.

இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் பானுமதி தலைமை தாங்கினார். வேலூர் ஒன்றியக்குழு துணை தலைவர் மகேஸ்வரிகாசி, ஊராட்சி மன்ற தலைவர் மாலதிசுரேஷ்பாபு, ஊராட்சி செயலாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் தாமரைச்செல்வி வரவேற்றார்.

இதில் மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஜெயந்தி, அறிவழகி மற்றும் அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com