9 -ம் தேதி நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் அறிவிப்பு

ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பேருந்து - ஆட்டோ ஓட்டுநர்கள் , தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
9 -ம் தேதி நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் அறிவிப்பு
Published on

சென்னை,

நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோத சட்டங்கள் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்து வேலைநிறுத்தம் நடத்தப்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், அரசுப் பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள 17 அம்சக் கோரிக்கைகளில்,  ஊதிய உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதைக் கைவிடுதல், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டங்கள் தொடரும் என தொழிற்சங்கத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com