குருத்துப் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

குறுவை பயிர்களை தாக்கும் குருத்துப் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
குருத்துப் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
Published on

கபிஸ்தலம்:

குறுவை பயிர்களை தாக்கும் குருத்துப் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் மோகன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குருத்துப்பூச்சி

பாபநாசம் வேளாண்மை கோட்டத்தில் நடப்பு குறுவை பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரில் ஆங்காங்கே குருத்துப் பூச்சி, கரு நாகப்பூச்சி மற்றும் இலை கருகல் நோய் அறிகுறிகள் தென்படுகிறது. கபிஸ்தலம் அருகே கருப்பூர் கிராமத்தில் குறுவை பயிர்களில் வேளாண்மை துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் கருநாவாய் பூச்சி அறுவடை நிலையில் உள்ள வயல்களில் அதிகமாக தென்படுகிறது. இதனை கட்டுப்படுத்திட ஆசி பேட் 25 எஸ்.பி. ஏக்கருக்கு 250 கிராம் உபயோகப்படுத்தலாம்.

இயற்கை முறையில்

மேலும் வாத்துகளை கருநாவாய் பூச்சிகள் காணப்படும் வயல்களில் மேச்சலுக்கு விடுவதன் மூலம் இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம். விளக்கு பொரி அமைத்து தாய் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். கருநாவாய் பூச்சிகளை வேப்பங்கொட்டை கரைசல் வயலில் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

பாக்டீரியல் இலை கருக்கல் நோயை கட்டுப்படுத்திட தாக்குதல் அதிகமாக காணப்படும் போது காப்பர் ஆட்சி குளோரைடு 500 கிராம் மற்றும் ஸ்பெக்ட்ரோ மைசின் சல்பேட் மற்றும் பெற்றா சொலின் கலவை 120 கிராம் ஆகிய மருந்துகளை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேலைகளில் தெளித்து இந்த நோயை கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com