இயற்கை மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு 28-ந்தேதி தொடங்குகிறது

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
இயற்கை மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு 28-ந்தேதி தொடங்குகிறது
Published on

சென்னை,

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகளில் 2019-20-ம் கல்வியாண்டுக்கான இயற்கை மருத்துவம், யோகா அறிவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

வருகிற 28 மற்றும் 29-ந்தேதிகளில் இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே கலந்தாய்வு குறித்த தகவல் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்த தகவல் கிடைக்கப்பெறாதவர்கள் www.tnhealth.org இணையதளத்தில் விண்ணப்ப பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தங்களுக்குரிய தகவல், அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அவரவருக்குரிய கட்-ஆப் மதிப்பெண் மற்றும் தரவரிசை எண்ணுக்கு ஏற்றவாறு உரிய கலந்தாய்வு நாளில் தங்களுடைய அனைத்து அசல் சான்றிதழ்களுடன் அல்லது தற்சமயம் படித்து வரும் கல்லூரியில் இருந்து ஆளறி சான்றிதழுடனும் கலந்து கொள்ள வேண்டும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து 27-ந்தேதி அன்றோ அல்லது அதற்கு பின்னரோ சென்னையில் மாற்றத்தக்க வகையில், Director of Indian Medicine and Homoeopathy, Chennai106 என்ற பெயரில் பகுதி கல்வி கட்டணம் ரூ.5 ஆயிரமும், கலந்தாய்வு கட்டணமாக ரூ.500-ம் என 2 காசோலைகளுடன் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.tnhealth.org என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com