

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நவராத்திரி உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, அமிர்தவல்லி தாயார் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தனித்தனி கேடயத்தில் எழுந்தருளி மங்கல வாத்தியங்களுடன் கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இதில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் ஆணையர் ஜெயா, கண்காணிப்பாளர் சுரேஷ், என்ஜினீயர் கிஷோர் கலந்து கொண்டனர்.