சதுரகிரியில் நவராத்திரி திருவிழா: காப்பு கட்டுதலுடன் தொடங்கியது

சதுரகிரியில் இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா இன்று (செவ்வாய் க்கிழமை) காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
சதுரகிரியில் நவராத்திரி திருவிழா: காப்பு கட்டுதலுடன் தொடங்கியது
Published on

வத்திராயிருப்பு,

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு லிங்க வடிவில் அருள்பாலிக்கும் ஆனந்தவள்ளி அம்மன் நவராத்திரி விழாவில் மட்டும் சதுரகிரி மலையில் உள்ள கொழு மண்டபத்தில் தினசரி பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.

நவராத்திரி விழாவில் தான் ஆனந்தவள்ளி அம்மனை உருவமாக தரிசிக்க முடியும் என்பதால் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் சதுரகிரி வந்து விரதம் இருந்து அம்மனை வழிபட்டு செல்வர்கள்.

இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா இன்று (செவ்வாய் க்கிழமை) காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் அம்மன் தினசரி இரவு பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி, கொலு பஜனை மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. வருகிற 1-ந் தேதி சரஸ்வதி பூஜையன்று ஆனந்தவள்ளி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

2-ந் தேதி ஆனந்தவள்ளி அம்மன் மகிஷாசுரவர்தினி அலங்காரத்தில் எழுந்தருளி அம்பு விடும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com