ஆறுமுகசுப்பிரமணிய சாமி கோவிலில் நவராத்திரி வழிபாடு

கூத்தாநல்லூர் அருகே ஆறுமுகசுப்பிரமணிய சாமி கோவிலில் நவராத்திரி வழிபாடு நடந்தது.
ஆறுமுகசுப்பிரமணிய சாமி கோவிலில் நவராத்திரி வழிபாடு
Published on

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே உள்ள, காக்கையாடியில் ஆறுமுகசுப்ரமணியசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தனி சன்னதியில் அகிலாண்டேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். நவராத்திரி கொலுவையொட்டி அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. விழாவில் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், தேன், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி, வாசனை திரவியங்களால் அபிசேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அருள் பாலித்தா. இதில் திரளான, பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com