நடிகர் மோகன்லாலுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து

நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
பிரபல மலையால நடிகரும், 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவருமான மோகன்லாலுக்கு சினிமா துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், நடிகர் மோகன்லாலுக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
இந்திய திரையுலகில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட மோகன்லாலுக்கு, இந்தியாவின் சிறந்த விருதுகளில் ஒன்றான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியத் திரையுலகில் பல உச்சங்களைத் தொட்டு, இந்திய சினிமாவில் சர்வதேச அடையாளமாக திகழும் திரு. மோகன் லால் அவர்கள், மேலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி விருதுகளையும் பெறுவதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






